தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மியான்மார் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 ஆயிரத்து 500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

மியான்மார் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 ஆயிரத்து 500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அந்த நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

மியான்மாரின் அதிபராக இருந்த டின் க்யாவ் உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியியை ராஜினாமா செய்திருந்த நிலையில், கடந்த மாதம் மியான்மாரின் புதிய அதிபராக, வின் மியிந்த்   பொறுப்பேற்றுள்ளார்.

மியான்மாரின் அதிபராக  வின் மியிந்த்    பொறுப்பேற்று ஒரு மாதத்துக்குள்ளாகவே அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

மியான்மாரில் ‘தின்கியான்’ என்று அழைக்கப்படும் பௌத்த புத்தாண்டு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

இந்நிலையில்   கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மனிதாபிமான அடிப்படையில் 8 ஆயிரத்து 500 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய மியான்மார் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளில் 36 பேர் அரசியல் வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பவர்கள். போதை மருந்து கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டோருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, வெளிநாட்டினர் 50 பேரும் தண்டனையிலிருந்து தப்பியுள்ளதாக மேலும்  தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...