Designed by Iniyas LTD
முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ விரைவில் கைது…
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறினார் எனும் குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு ஊடகமொன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச ஆறு வெவ்வேறு பொலிஸ்நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுகின்றது.
பொலிஸ்தலைமையகம்,கோட்டை,கொள்ளுப்பிட்டி,கொட்டாஞ்சேனை, கட்டான, மட்டக்களப்பு ஆகிய பொலிஸ் நிலையங்களிலேயே குறித்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, முன்னதாக பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவையும்,பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவையும் கைது செய்ய வேண்டுமென விஜேதாச ராஜபக்ச கோரியிருந்தார்.
இந்தநிலையில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் ஹேமசிறி பெர்னான்டோ கைது செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.