தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முன்னாள் போராளிகள் இருவருக்கு சிறை நீடிப்பு!

p033கஜபா ரெஜிமன்டின் கட்டளைத் தளபதி கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட 8 பேரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் இருவரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த இருவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் விசேட சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி வில்பத்து சரணாலயத்தில் வைத்து குறித்த இராணுவத்தினர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தின் சந்தேக நபர்களான சூரியகாந்தன் ஜெயசந்திரன் என்றழைக்கப்படும் உதயன் மற்றும் சிவபிரகாசன் சிவசீலன் என்றழைக்கப்படும் இளையன் ஆகிய இருவருக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...