Designed by Iniyas LTD
முன்னாள் போராளி கிளிநொச்சியில் கைது!
கிளிநொச்சியில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, ஆனந்தபுரத்தை சேர்ந்த தாமோதரம்பிள்ளை ஜெயகாந்த் என்ற
குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலை யில் நேற்று மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தில் ஊடறுப்பு பிரிவில் இருந்து புனர்வாழ்வு பெறவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட் டுள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டவர் வவு னியா பயங்கரவாத தடுப்பு முகா மிற்கு நேற்றிரவே அனுப்பி வைக் கப்பட்டுள்ளார்.
கைதான நபருக்கு திருமண மாகி 2 பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
