தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லை,பெரியாறு அணை : தேதிக் குறிப்பிடாமல் மூவர்குழு ஆய்வு மீண்டும் ஒத்திவைப்பு

mullai periyarமூவர் குழுவினர் 3 மாதங்களுக்கு ஒருமுறை முல்லை,பெரியாறு அணையை பார்வையிட்டு ஆய்வு நடத்த வேண்டும். முல்லை,பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டதை அடுத்து அணையை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மூவர் குழு மற்றும் துணைக்குழு அமைக்கப்பட்டது.

மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைமை பொறியாளர் நாதன் தலைமையில் தமிழக மற்றும் கேரள பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழுவினர் கடந்த 18–ந் தேதி அணையில் ஆய்வு மேற்கொண்டு குமுளியில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் அப்போது அணை நீர்மட்டம் 115 அடிக்கும் குறைவாக இருந்ததால் நிர்வாக காரணங்களை கூறி மே 23–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை நடைபெறுவதாக இருந்த மூவர் குழுவின் ஆய்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பெரியாறு அணையில் கடந்த 2 முறை நடந்த ஆய்வின் போது மழை பெய்தது. இதனை பொருட்படுத்தாமல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கூட்டம் நடந்துள்ளது.

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதால் அன்றைய தினம் பொதுப்பணித்துறை உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் தமிழக பிரநிதிகள் மூவர் குழு கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து மூவர் குழு தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நாதன் ஆய்வு கூட்டத்தை அடுத்த மாதம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

Comments
Loading...