தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லை-குமுழமுனை பாடசாலையில் நடந்த மெய்வல்லுனர் போட்டி!

முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று (30.01.2018) மதியம் 1.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் க.ஜெயவீரசிங்கம் தலமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக பழைய மாணவனும் வைத்தியருமான ம.வினிதரன் (யாழ் வைத்தியசாலை), சிறப்பு விருந்தினர்களாக த.சிறீபுஷ்பநாதன் (கரைதுறைபற்று கோட்டக்கல்வி அதிகாரி), ந.குணசீலன் (இ.போ.ச சாலை முகாமையாளர் முல்லைத்தீவு ), கௌரவ விருந்தினர்களாக க.விக்னேஸ்வரன் (குமுழமுனை மத்தி கிராம சேவையாளர்), அயற் பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , பழைய மாணவர்கள் , பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments
Loading...