Designed by Iniyas LTD
மு.தம்பிராசாவின் சத்தியாகிரக போராட்டம் தொடர்கிறது.

தமிழர்தாயகம் வலிகாமம் வடக்கு மற்றும் சம்பூர் பகுதி மக்கள் தத்தமது பூர்வீக நிலங்களில் குடியேற சிறீலங்கா அரச படைகள் அம்மக்களின் நிலங்களிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதியுமாகிய மு.தம்பிராசா சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகின்றார்.

கடந்த 21.02.2014 இல் இருந்து யாழ் மாவட்டச்செயலகத்துக்கு முன்பாக காலவரையற்ற தொடர் சத்தியாகிரக போராட்டத்தை அவர் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் தம்பிராசாவின் சத்தியாகிரக போராட்டத்திடலுக்கு சென்ற வடமாகாணசபை உறுப்பினர்கள் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் கனகசுந்தரசுவாமி ஆகிய இருவரும் மு.தம்பிராசாவுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.