Designed by Iniyas LTD
யானையை கொலை செய்து 70 லட்சம் பெறுமதியான கரிமுத்துக்கள் அபகரிப்பு
சுமார் 70 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு கரிமுத்துக்களுடன் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
புத்தல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களும், தம்புள்ளை நகரை சேர்ந்த ஒரு நபரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யால தேசிய பூங்கா
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், யால தேசிய பூங்காவில் இருந்த யானையொன்றை கொலை செய்து இந்த கரிமுத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.