Designed by Iniyas LTD
யாழில் களைகட்டிய மாட்டுவண்டிச் சவாரி…
யாழ்.இளவாலை சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பாரம்பரிய மாட்டுவண்டிச் சவாரி நேற்றையதினம் யாழ். அராலி மாட்டு வண்டிச் சவாரித்திடலில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பாரம்பரிய இனங்களைச் சேர்ந்த காளைகள் ஆர்வத்துடன் இந்த போட்டியில் கலந்து கொண்டன. போட்டியின் இறுதியில் வெற்றியீட்டிய காளைகளுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினருடன் பிரதேச சபை உறுப்பினர்கள், சவாரி ஆர்வலர்கள், ஊரவர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
