தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் நீண்டகாலமாக இயங்கிவந்த போதைபொருள் விற்பனை நிலையம் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் கேக் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய போதைப் (மாவா) பாக்கு விற்பனை நிலையம் நேற்றைய தினம் விசேட பொலிஸ்பிரிவினால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடையின் உரிமையாளார் புத்தளம் பகுதியை சேர்தவர் என கூறப்பட்டுள்ளது.

இந்த முற்றுகையின்போது 6 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே இப்போதைபொருள் விற்பனையகம் இயங்கிவந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விற்பனை நிலையம் நீண்ட காலமாக அங்கு இயங்கிவருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்  வடமாகாண பொலிஸ் அத்தியட்சகர்  ரொக்ஷான் பெர்ணாண்டோவின் அறிவுறுத்தலுக்கமைய , காங்கேசந்துறை பொலிஸ் அத்தியட்சகர்   டி.கே பிரியந்த தலைமையிலான விசேட குழு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...