தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் மீன்பிடிக்க சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

யாழ் குருநகர் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல்  போயுள்ளதாக  அவர்களது உறவினர்கள்  யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்ற நிலையில்  இதுவரையில் அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை என குரிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கடலிற்கு சென்ற மீனவர்களின்  சென்ற படகு மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்,  மீனவர்கள்   தொடர்பில் இதுவரையில் எந்த தகவல்களும் வெளிவரவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...