தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் பதற்றமான சூழலும் நிலவி வருகின்றது

யாழில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வீதி சோதனைகளால் மக்கள் பெரிதும் அசௌகரியங்களை முகங்ககொடுத்து வருகின்றார்கள்.காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொள்ளும் தீடிர் சோதனை நடவடிக்கைகளால் பதற்றமான சூழலும் நிலவிவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இவ்வாறு காவல்துறையினரும், படையினரின் அதிரடிப் படையினரும் இணைந்து இவ்வாறான ரோந்து நடவடிக்கைகள் மற்றும் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.வீதிகளில் நிற்றும் படையினர் வீதியால் பயணிப்போர்களை ஆயுத முனையில் வழிமறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.chek paint

சிவில் நடவடிக்கையில் காவல்துறையினரே இவ்வாறான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்களாக இருந்தும், காவல்துறையினர் அருகில் கைகட்டிப் பார்த்திருக்க படையினரே சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக யாழ்.இராசாபாத வீதி, நல்லூரடி, இராசாவின் தோட்டம், பண்ணைப் பகுதிகளில் இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ் நகர்பகுதி மற்றும் முக்கியமான இடங்களில் படையினர் இவ்வாறான சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டாலும் கொலையும் கொள்ளையும்,வாள்வெட்டுக்களும் நாளுக்கு நாள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

பெரும்பாலும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையிடம் முறையிட்டும் கொள்ளையர்கள் தொடர்பில் காவல்துறையினர் அசமந்த போக்கினை கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
படையினரின் புலனாய்வாளர்கள் என்று சொல்லப்படும் சிலர் இவ்வாறான சோதனைகளில் இருந்து தப்பித்துவிடுகின்றார்கள் அவர்களுக்கு படையினரால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையினை காட்டியவுடன் அவர்களை சோதனை செய்யாமல் விடுகின்றார்கள் அவர்கள் மதுபோதையிலோ அல்லது வாகனங்களில் ஆயுதங்களையும் கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

காவல்துறையினர் ஆங்காங்கே நின்றாலும் காவல்துறையினரின் எண்ணிக்கைக்கு அதிகளவான படையினர் நின்று இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதனால் மக்களி இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களை சோதனை இட படையினருக்கு அதிகாரம் இல்லை என்றும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

Comments
Loading...