Designed by Iniyas LTD
யாழில் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டும் அதிரடி படையினர்…!
யாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பெற்றுச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
பருத்தித்துறை பிரதேச செலயகத்தில் ஒரு முஸ்லிம் குடும்பமே பதிவுகளை மேற்கொண்டுள்ளது எனினும் அப்பகுதியில் பல முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே பருத்தித்துறை பள்ளிவாசலுக்குச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களின் விபரங்களை மௌலவியிடம் கேட்டுள்ளனர்.
அதனடிப்படையில் நேற்று குறித்த விபரங்களை மௌலவி அதிரடிப்படையினரிடம் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை பருத்தித்துறை பிரதேசசபைக்குட்பட்ட நகரந்த்தின் பல பகுதிகளில் முஸ்லிம் மக்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.