தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்  கோட்டைக்கு அருகில் 2700 வருடங்களுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிப்பு..

யாழ்  கோட்டைக்கு அருகில் 2700 வருடங்களுக்கு முன்னர்  மக்கள் வாழ்ந்ததற்கான  சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் யாழ்  கோட்டைக்கு அருகில் பாரியளவு பெறுமதியான வர்த்தக நிலையம் ஒன்று காணப்பட்டதற்கான   சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் , திணைக்களத்தின் விசாரணை அதிகாரி பேராசிரியர் எஸ்.புஷ்பரத்னம் தெரிவித்துள்ளார்.

யாழ்  கோட்டைக்கு அருகில் நேற்றையதினம்  நிகழ்த்திய உரையின் போதே  அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

அதோடு அக் காலப்பகுதியில் தென்னிந்தியாவுடன் மிகவும் நெருக்கமான வர்த்தக தொடர்புகள் காணப்பட்டதாகவும், இரண்டு நாடுகளுக்கு இடையே கடல் மூலம் வர்த்தகம் இடம்பெற்றதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அந்த பிரதேசத்தில் கடந்த 2700 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்துள்ளமை தெளிவாகியுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் மிகப்பெரிய சிறைச்சாலை ஒன்று இருந்தமைக்கான தகவல் கிடைத்துள்ளதாகவும்,

யாழ்ப்பாணம் போர்த்துகீசியம் கோட்டைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட விசேட அகழ்வின் போது விசேட 9 மண் மேடுகள் இருந்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  இது தொடர்பில்   ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும்  அவர் தெரிவித்துள்ளமை குரிப்பிடத்தக்கது..

Comments
Loading...