தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் சாவகச்சேரியில் இரு இளைஞர்கள் மீது வாள்வெட்டு

சாவகச்சேரி, கெருடாவில் பகுதியில் இனந்தெரியாத கும்பல் ஒன்றின் வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.30 மணிக்கு இடம்பெற்றது. சம்பவத்தில் கெருடாவிலைச் சேர்ந்த செல்வராஜா ரவீந்திரன் (வயது-28), சிவகுமார் சோபன்(வயது -27) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.valvedu

சோபன் என்பவர் கெருடாவிலில் கடை நடத்தி வருபவர் என்றும், இன்று இரவு கடையைப் பூட்டிவிட்டு நண்பருடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் எதிரே மறைந்திருந்த குழுவினர் இவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டிப் படுகாயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டனர். விசாரணைகளை யாழ் காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Comments
Loading...