Designed by Iniyas LTD
சிறீலங்கா போர்குற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்படாமை கவலையளிக்கின்றது – ததேகூ
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்கப்படாதமை கவலையளிப்பதாகவும், இருப்பினும் அடுத்த செப்ரெம்பர் மாதம் அந்த அறிக்கை வலுவானதான அமையும் என எதிர்பார்ப்பதாகவும், ஐ.நா. உயர் அதிகாரியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன், நேற்று இலங்கை வந்தடைந்தார். இலங்கை வந்த அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பிலேயே மேற்படி விடயத்தை அவர்கள் ஐ.நா. அதிகாரியிடம் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் நேற்று மாலை ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.