தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

இத்தகவலை யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு மூன்று நாள் விஜயத்தை  மேற்கொண்டு நேற்று அங்கு  சென்ற பிரதமர், யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி முன்னேற்றங்கள் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதன்போது யாழ். மாநகர முதல்வர்  குறித்த  திட்டத்திற்கான மாதிரி வரைபை சமர்ப்பித்திருந்ததோடு, பிரதமரிற்கும் அதன் பிரதி ஒன்றை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் அதனை ஆராய்ந்த பிரதமர், குறித்த  நகர திட்டம் சிறந்த திட்டம் என கூறியதோடு முதல்வருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாநகர முதல்வர், குறித்த நகரத்தை அமைப்பதற்கான நிதி மூலத்தை கண்டறிவதற்கு பிரதமர் இணக்கம்  தெரிவித்ததாக  கூறியுள்ளார்.

Comments
Loading...