தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் நல்லூரில் தியாகதீபம் திலீபனின் இரண்டாம் நினைவு நாள் அனுக்ஷ்டிப்பு…

தியாகதீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று  காலை-09.30 மணி முதல் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது..

நிகழ்வுகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வலி. தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் திருமதி- செந்தினி தருமசீலன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் நினைவுச் சுடரேற்றி  திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி மற்றும் மலர் வணக்கம்  செலுத்தப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில்  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...