தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் நல்லூர் கந்தனின் வடம்பிடித்த யப்பானியர்..

நல்லூர் பெருந்திருவிழாவின் 23ஆம் நாளாகிய நேற்றைய சப்பற  திருவிழாவின்போது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அடியவர் ஒருவரும் வேட்டி கட்டி வடம் பிடித்து இழுத்த காட்சி மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

குறித்த நபர் ஜப்பான் நாட்டிலிருந்து இரண்டாவது தடவையாக நல்லூர் திருவிழாவைக் காண வந்துள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.

குறித்த யப்பான் நாட்டவர் நல்லூர் கந்தனின் தீவிர பக்தர் என்பதுடன் தனது நேர்த்திக்கடனைப் பூர்த்தி செய்வதற்காக இந்த  தடவையும் நல்லூரிற்கு  வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் பரந்துவாழும் தமிழ்ச் சமுதாயத்தின் அடையாளச் சின்னமாக திகழும் நல்லூர் கந்தன் ஆலயம்  ஜப்பான் நாட்டவரையும் தன்னுள் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Comments
Loading...