தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆண்களும், பெண்களும் ஒன்றாக உணவகம் செல்லத் தடை – எங்கு தெரியுமா?

இந்தோனேஷியாவில் ஆண், பெண் இணைந்து உணவகம் சென்று உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

இஸ்லாமிய மத நடவடிக்கைகளை பின்பற்றி வரும் இந்தோனேஷியாவின் ஆச்சே என்னும் கிராமத்திலேதான் குறித்த  தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களுக்கு ஒன்றாக செல்லும் நபர்கள் தம்பதியராய் இருத்தல் வேண்டும், அல்லது  உறவினராக இருத்தல் வேண்டுமென குறித்த சட்டம் தெரிவிக்கின்றது.

அதே வேலையில் சூதாட்டம், குடி, ஓரினச்சேர்க்கை போன்ற நடவடிக்கைகள் ஏதும் இல்லா நகரம் என்னும் பெயரை எடுத்ததன் மூலம் உலக கவனத்தினையும் ஈர்த்துள்ளது ஆச்சே கிராமம்.

அந்த வகையில் தற்போது இந்த நகரத்தில் புதிய இஸ்லாமிய கொள்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி ஆண்களும் பெண்களும் ஒரே மேசையில் அமர்ந்து உணவு உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு ஒரு நிறுவனத்தில் பணி புரியும் ஆண், பெண் கூட ஒரே மேசையில் அமர்ந்து உண்ண கூடாது என இந்த கட்டுப்பாடு தெரிவிக்கின்றது.

இதேவேளை இஸ்லாமிய நகரங்களை ஒப்பிடுகையில் ஆச்சே கிராமம் தான் உலகிலேயே மிக அதிகாமாக இஸ்லாமிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...