தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வேலை செய்யுமாறு கூறியதால் தந்தையை என்ன செய்தார்கள் தெரியுமா?.

ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 57 வயது மிக்க நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவரது  உடலில் 40 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட தடங்களுடன் கடந்த மாதாம் 27-ம் தேதி அவரது உடல் அண்டெடுக்கப்பட்டது

இதனை அடுத்து,  அவருடைய பிள்ளைகளான  17, 18 மற்றும் 19 வயதுடைய மூன்று மகள்களைபோலீசார் தீவிர விசாரணைக்கு உள்படுத்தினர்.

விசாரணைக்கு பின்னர் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது  படிக்கவிடாமல் என்நேரமும் வீட்டு வேலை செய்ய கூறி அவர் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததோடு தங்களை   ஆயுதங்களால் தாக்கியதாகவும் அவர்கள்  கூறியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் செப்டம்பர் 28 வரை மூன்று சகோதரிகளையும் ரிமாண்ட் செய்து நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூவருக்கும் குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...