தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு ஆர்ப்பாட்டம்

யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி நேற்று காலை 11 மணியளவில் கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள், பல ஆண்டுகளாக பணி புரியும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென்று இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நிரந்தர நியமனம் வழங்கத் தவறும் பட்சத்தில் வடக்கு மாகாண சபையின் முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்போம் என்றும் தொண்டர் ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.jaffna-teachers-protest

Comments
Loading...