தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராஜித சேனாரட்ண விடுத்த கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்து விட்டார்

பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைத் தாருங்கள் அதன் பிற்பாடு அமைச்சரவையில் அங்கம் வகிப்பது குறித்து கவனத்தில் கொள்ளலாம் என இன்று அரசாங்கத் தரப்புடன் நடந்த சந்திப்பில் இரா. சம்பந்தன் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.tna-sambanthanஅமைச்சரவைக்கு வாருங்கள் நீங்கள் எங்களிடம் கேட்கத் தேவையில்லை நீங்களே நடைமுறைப்படுத்தலாம் என கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் அமைச்சர் ராஜித சேனாரட்ண விடுத்த கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்து விட்டார்.

இந்த நிலையில் பாராளுமன்ற அமர்வின் பின் தீர்வு குறித்த விடயங்களிலும் உரிய கவனம் செலுத்தப்பட உள்ளதாக பதில்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...