Designed by Iniyas LTD
வரவு செலவு திட்டத்தில் சு.கட்சியின் யோசனையும் உள்ளடக்கம்!
2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளை உள்ளடக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்ட யோசனைகளை பெற்றுக் கொள்ளும் போது ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்றே சுதந்திரக் கட்சியினதும் யோசனைகளை உள்வாங்கிக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இதன்படி, வரவு செலவுத் திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளையும் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
அமைச்சர்களான சரத் அமுனுகம, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தலைமையிலான குழுவொன்றையும் இதற்காக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியினால் சமர்ப்பிக்கப்படும் யோசனைகளை கண்காணிப்பதற்கும் சுதந்திரக் கட்சி தனியான குழு ஒன்றை நிறுவத் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 10ம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றின் யோசனைத் திட்டங்களை உள்ளடக்கிய ஓர் நடுநிலையான வரவு செலவுத் திட்டமாக அமைய வேண்டுமென ஜனாதிபதி, அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.