Designed by Iniyas LTD
ஸ்ரீ சுதந்திரக்கட்சியுடன் கூட்டமைப்பும் இணைந்து போட்டியிடவுள்ளதாம்?
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், டக்ளஸ் தேவானந்தா எம்முடன் இணைந்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஏன் டக்ளசை இணைத்துக்கொண்டீர்கள் எனக் கேட்டது. தற்போது அடுத்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து, சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பங்காளிக் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.