தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் தேவாலயத்தை அகற்றுவதற்கு வழக்கு தாக்கல் செய்துள்ள நகரசபை…

வவுனியா சின்னக்குளத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை இடித்து அகற்றுவதற்கு வவுனியா நகரசபை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

குறித்த கிறிஸ்தவ தேவாலயமானது வவுனியா நகரிலிருந்து ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

தேவாலய  கட்டுமானப்பணிகளின் போது நகரசபையின் அனுமதியினை பெறவில்லை என கூறியே  இந்த  வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்  குறித்த தேவாலயத்தின் தலைமை போதகர் தேவாலயத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக வவுனியா நகரசபையின் அனுமதி கோரலுக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு சகல ஆவணங்களும் நகரசபைக்கு சமர்ப்பித்திருந்ததாக கூறியுள்ளார்.

இந்நிலயில் கடந்த எட்டு ஆண்டுகளாக அனுமதி வழங்காமல் இழுத்தடித்த நகரசபை திடீரென தேவாலயத்தை இடிப்பதற்கு நீதிமன்ற நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

வவுனியா நகரில் 400 அதிகமான கட்டிடங்கள் நகரசபையின் அனுமதி இன்றியே கட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரிலிருந்து நகரசபை எல்லையில் எவருக்கும் தொந்தரவு இல்லாத இடத்தில் அமைந்துள்ள எமது தேவாலயத்தை இடிக்க நகரசபை முயற்சி செய்வது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  குறித்த விடயம் தொடர்பில்  நகரசபைக்கு எதிராக எமது சட்டத்தரணி எல்.ஜெஸ்ரீன் ஊடாக உயர்நீதிமன்றில் வழங்கு தாக்கல் செய்துள்ளதாகவும்,

அதன் அடிப்படையில் நகரசபை நிர்வாகத்தின் மீது ஒரு முழுமையான விசாரணைய உள்ளுராட்சி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என தாம்  கோரிக்கை முன்வைத்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைத்மது தேவாலயம் குறிவைக்கப்பட்டதானது அரசியல் ரீதியான நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என , சந்தேகமும் இருப்பதாகவும் அவர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...