தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டக்களப்பில் அதிகரிக்கும் தற்கொலைகள் – சமூக ஆர்வலர்கள் கவலை…

மட்டக்களப்பு – கல்லடி, நாவற்குடா இசை நடனக்கல்லூரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

18 வயதுடைய சுப்ரமணியம் கிருத்திகா எனும் யுவதியே இவ்வாறு   சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்து வருகின்றது .

கடந்த 23 நாட்களில் எட்டுக்கும் மேற்பட்ட தற்கொலை மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

அதிலும்  குறிப்பாக இளம்பெண்கள் மத்தியிலான தற்கொலைகள் அதிகரித்து வருகின்றமை  கவலைகுரிய விடயம் என தெரிவித்துள்ள  சமூக ஆர்வலர்கள்,  இதன்  தடுப்பது குறித்து முறையான திட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும்  வலியுறுத்தியுள்ளனர்.

Comments
Loading...