தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்.பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மாணவர்களுக்குப் பிணை வழங்குமாறு கோரி இன்று யாழ். நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டபோதும் அவர்களை விடுததை செய்ய நீதவான் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என யாழ். நீதவான் ஏ.எஸ்.பி. போல் தெரிவித்துள்ளார்.

இதேவேளைக் மாணவர்களின் கைது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அபிப்பிராயம் இன்னும் கிடைக்கவில்லை எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் புகைப்படங்களை வைத்திருந்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் என்.திவாகரன் மற்றும் செயலாளர் எஸ்.பபில்ராஜ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...