தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வித்தியா கொலைக்குற்றத்தில் கைதானவர்வரின் வீடு தீக்கிரை : பொதுமக்கள் தாக்குதல்!

வைத்தியசாலையில் பொதுமக்கள் திரண்டு வித்தியாவின் கொலைக்குற்றத்தில் கைதான சந்தேக நபர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவனுடைய வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் குடும்பத்தினர்கள் தப்பி ஓடியுள்ளனர். கைதான சந்தேக நபர்களை முழுமையாக அடையாளம் காணப்பட்டதன் பின்னரே அவர்களது வீடுகள் தாக்குதலிற்குள்ளாகியுள்ளது.. இதனிடையே அச்சம் காரணமாக எஞ்சிய சந்தேக நபர்களது குடும்பங்களும் தலைமறைவாகியிருப்பதாக கூறப்படுகின்றது.

p1

p3

இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சந்தேக நபர்களின் மீதும் பொதுமக்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பலத்த பிரயத்தனங்கள் மத்தியினில் அவர்களை பொலிஸார் மீட்டெடுத்திருந்தனர். தற்போது சந்தேக நபர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தினில் தடுத்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

vidya

தற்போது அவர்களை பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. ஊர்காவல் துறையினில் நிலவி வரும் பதற்றத்தினால் அவர்கள் அனைவரும் யாழ்.நீதிமன்றினில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

Comments
Loading...