Designed by Iniyas LTD
விராட் கோலி அபாரம் – நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா வெற்றி
இந்திய அணி நீண்ட இடைவெளிக்குப் பின் ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் பொறுப்பை சுமையாக கருதாமல் சதம் அடித்து வழக்கம்போல அணியை வெற்றிபெறச் செய்தார் விராட் கோலி. இவருடன் ரஹானே 73 ரன்கள் அடித்து கை கொடுக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.
அன்னிய மண்ணில் சாதிக்கத் தவறிய தோனி தலைமையிலான இந்திய அணி தற்போது ஆசியத் துணைக் கண்டத்தில் விராட் கோலி தலைமையில் புத்துணர்ச்சியுடன் புதிய பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது.
ஆசியக் கோப்பையின் 2-வது ஒருநாள் ஆட்டம் ஃபதுல்லாவில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. வங்கதேச அணியின் ஷம்சுர் ரஹ்மான் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் அனமுல் ஹேக் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார். இவருடன் சிறிதுநேரம் ஒத்துழைத்த மோமினுல் ஹேக் 23 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
பின் 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹிம் மற்றும் அனமுல் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டனர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 133 ரன்கள் குவித்தது. அசத்தலாக ஆடிய முஷ்ஃபிகுர் ரஹிம் சதம் அடித்தார். இது ஒருநாள் அரங்கில் அவர் அடித்த 2-வது ஒருநாள் சதமாகும். ஆசியக் கோப்பையில் 2008-ம் ஆண்டு அலோக் கபாலி இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்திருந்தார். அதன் பின் தற்போதுதான் வங்கதேச வீரர் ஒருவர் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்துள்ளார்.
கேப்டனுடன் ஒத்துழைத்து ஆடிய அனமுல் அரைசதம் அடித்தார். இவர் 106 பந்துகளை சந்தித்து 77 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அணிக்கு கெüரவமான ஸ்கோரை ஈட்டித் தந்த முஷ்ஃபிகுர் 117 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது சமி பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். கடைசி கட்டத்தில் 12 பந்துகளில் ஜியார் ரஹ்மான் 18 ரன்கள் அடித்தார். இதனால் வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பந்து வீச்சு சுமார்: வழக்கம்போல இந்திய அணியின் பந்து வீச்சு மோசமாகவே இருந்தது. வருண் ஆரோன் 7.5 ஓவர்களில் 74 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த இரண்டாவது வீரர் என்ற மோசமான பெயரைப் பெற்றார். இதற்கு முன் ஐக்கிய அரபு அமீரக அணியின் குரன் கான் 78 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.
தொடக்கம் மந்தம்: பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவனும் மந்தமான தொடக்கம் தந்தனர்.
ஷிகர் தவன் 28 ரன்கள் எடுத்திருந்தபோது அப்துர் ரசாக் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். இவர் 44 பந்துகளை சந்தித்து இந்த ரன்களை அடித்திருந்தார். ரோஹித் சர்மா 21 ரன்களில் வெளியேறினார். இருவரும் 10 ஓவர்களுக்கும் மேலாக விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனரே தவிர ரன் குவிக்க முயற்சிக்கவில்லை. இதனால் அடுத்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் ரஹானேவின் மீது பொறுப்பு கூடியது.
கேப்டன் நெருக்கடி எதையும் தன் சிரத்தில் ஏற்றிக் கொள்ளாத கோலி வழக்கமான தன் பாணியில் ரன் குவிக்க ஆரம்பித்தார். அவருக்கு ரஹானேவும் ஒத்துழைத்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்க இருப்பதைக் கருத்தில் கொண்டு இருவரும் தவறேதும் நிகழாமல் பார்த்துக் கொண்டனர். அதேசமயம் தவறான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தவும் தவறவில்லை.
அசத்தலாக ஆடிய விராட் கோலி சதம் அடித்தார். இது ஒருநாள் அரங்கில் கோலி அடிக்கும் 19-வது சதமாகும். மறுமுனையில் ரஹானே அரைசதம் அடித்து நடைபோட்டார். இந்த ஜோடி அணியின் வெற்றிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
ஆட்டத்தின் 46-வது ஓவரில் ருபெல் ஹுûஸன் வீசிய பந்தில் ஏமாந்த விராட் கோலி ஸ்டெம்பை பறிகொடுத்தார். 122 பந்துகளை சந்தித்த கோலி 16 பவுண்டரி 2 சிக்ஸர்களின் உதவியுடன் 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து ஒத்துழைத்த ரஹானே 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் 83 பந்துகளை சந்தித்து 1 சிக்ஸர் 7 பவுண்டரி அடித்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி 49 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 280 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 2 ரன்களுடனும், ராயுடு 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஸ்கோர் போர்டு
வங்கதேசம்
மொத்தம் (7 விக்கெட்; 50 ஓவர்கள்) 279
விக்கெட் வீழ்ச்சி:
1-16 (ஷம்சுர் ரஹ்மான்), 2- 49 (மோமினுல் ஹேக்),
3-182 (அனமுல் ஹேக்), 4-231 (நயீம் இஸ்லாம்),
5-241 (நசிர் ஹுûஸன்), 6-270 (ஜியாவுர் ரஹ்மான்)
7-276 (முஷ்ஃபிகுர் ரஹிம்)
பந்து வீச்சு:
புவனேஷ்வர் குமார் 8 -1- 41-1,முகமது சமி 10- 1-50-4 ,
வருண் ஆரோன் 7.5-0-74-1,அஸ்வின் 10-1-50-1,
ஜடேஜா 10-0-37-0, ராயுடு 3-0-17-0, கோலி 1.1-0-6-0.
இந்தியா
மொத்தம் (4 விக்கெட்; 49 ஓவர்கள்) 280
விக்கெட் வீழ்ச்சி:
1-50 (தவன்), 2-54 (ரோஹித்), 3-267 (கோலி),
4-272 (ரஹானே).
பந்து வீச்சு:
மோர்டஸா 9-1-44-0, ருபெல் ஹுûஸன் 10-1-63-1,
அப்துர் ரசாக் 10-0-55-1, ஜியாவுர் ரஹ்மான் 5-0-20-1,
சோஹக் காஸி 8-0-49-1,மோமினுல் ஹேக் 2-0-13-0,
நயீம் இஸ்லாம் 1-0-15-0, நஸிர் ஹுûஸன் 4-0-20-0.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இன்று 27-02-2014 மோதல்
ஆசியக் கோப்பை போட்டியின் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதவுள்ளன.