தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: டிஎஸ்பி கீதாஞ்சலியிடம் விசாரணை

dspடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது தோழியும் அரவக்குறிச்சி டி.எஸ்.பி.யுமான கீதாஞ்சலி சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் மாளவியா, அர்ச்சகர் விஜயராகவன் மற்றும் விஷ்ணுபிரியாவின் தோழியும், கீழக்கரை டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 இந்நிலையில் விஷ்ணுபிரியாவின் மற்றொரு தோழியும் அரவக்குறிச்சி டி.எஸ்.பி.யுமான கீதாஞ்சலியிடம் விசாரணை நடத்தினர். இதற்காக சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் காவல்துறை கண்காணிப்பாளர் நாகஜோதி விசாரணை மேற்கொண்டார்.

 இதேபோல் இந்த வழக்கு தொடர்பாக ஆய்வாளர் ஆரோக்கியராஜ் என்பவரும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். இவர் கோகுல்ராஜ் கொலை நடந்தபோது நாமக்கல் மாவட்டத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றியுள்ளார்.

 இவரிடம் நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவுக்கு நெருக்கடி கொடுத்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

Comments
Loading...