தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீலங்கா ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கிறார் விக்கி!

WIGNESWARAN_CI

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்திக்க உள்ளார்.

வடக்கு விவகாரங்கள் குறித்து இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 18ம் திகதி இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பொதுமக்கள் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பது குறித்து பேசப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டிருப்பது பாதுகாப்பு நோக்கத்திற்காக அல்ல எனவும் வேறும் தேவைகளுக்காகவே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெற்கிலிருந்து வடக்கிற்கு மீன்பிடிக்கச் செல்லும் சிங்கள மீனவர்களையும் வடக்கின் சிங்கள மக்களையும் பாதுகாக்கவே வடக்கில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Comments
Loading...