Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில், ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்குமாறு மாவட்ட அரச அதிபர் அறிவுறுத்திய போதும் அதிகாரிகள் மௌனம் சாதிப்பதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிடுகிறார்.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 52 வயதான நபர் ஒருவர் குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 16வயதிற்குட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது பாரதூரமான குற்றம் என்றும் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பெண்கள் பொலிஸில் இணைவதில் அக்கறை காட்டுவது மிக குறைவு என்று தெரிவித்துள்ள கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இதனால் தமது பொலிஸ் நிலையங்களில் தமிழ் பெண்களின் பிரச்சினையை தீர்க்க பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் சில ஆசிரியர்களே மாணவர்கள் விடயத்தில் தவறாக நடப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளார். அத்துடன் கிளிநொச்சியில் மணல் அகழ்வு, கசிப்பு, கஞ்சா போன்ற சட்டவிரோத மதுப்பாவனைகளை தடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
