தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீ நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட ஐவருக்கு மரணதண்டனை!

dumintha-silva-2பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி கொழும்பை அண்மித்த முல்லேரியா  வல்பொல சந்தியில் வைத்து, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற இந்த கொலைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கடந்த ஜூலை 14ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. கொழும்பு மேல் நீதிமன்றில் நடைபெற்றுவந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதனடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில், முதலாவது, மூன்றாவது, ஏழாவது, பத்தாவது மற்றும் பதினோராவது சந்தேகநபர்கள் குற்றவாளிகளாக காணப்பட்ட நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

dumintha-silva-3

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அனுர துஷார டிமெல் சமிந்த ரவி என அழைக்கப்படும் தெமட்டகொட சமிந்த சரத் பண்டார மற்றும் பிரயந்த ஜானக பண்டார ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை ஐந்தாவது சந்தேகநபரான பிரியந்த ஜனக பண்டார வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகாது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...