Designed by Iniyas LTD
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.
குறித்த இருவரும் குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த இளைஞர்கள் காணாமல் ஆக்கப்ப்ட்ட சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
