Designed by Iniyas LTD
19 வயது யுவதி காணாமல் போயுள்ளார்
யாழ்.கொடிகாமத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியைக் காணவில்லையனெ அவரின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.கொடிகாமம் மந்துவில் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த புஸ்பராசா றெசிக்கா என்ற யுவதியே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.
தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற குறித்த யுவதி, இதுவரை வீடு திரும்பவில்லையென தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொகவந்தலாவ மோரா மேல்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்தசிறுவனை 4 நாட்களாக காணவில்லை
பொகவந்தலாவ மோரா மேல்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சத்தியசீலன் மோசஸ் என்ற 16வயது பாடசாலை சிறுவனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லையென சிறுவனின் தந்தை பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த திங்கட்கிழமை காலை பாடசாலைக்கு சென்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவனின் பிறப்பு சான்றிதழ் என்பன எடுத்து சென்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.எனவே சத்தியசீலன் மோசஸ் காணாமல் போனது தொடர்பில் மோசஸ் கல்வி கற்று வந்த டிக்கோயா டில்லரி தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் தேவதாஸ் அவர்களிடம் தொடர்பு கொண்டு வினாவிய போது குறித்த மாணவன் கடந்த திங்கட்கிழமை பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லையென அதிபர் தெரிவித்தார்.
காணாமல் போன சிறுவன் குறித்து பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்ததோடு, குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் கிடைத்தால் சம்பந்தபட்ட பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொகவந்தலாவ பொலிஸார் கேட்டுகொள்கின்றனர்.