தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க..

2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ஐதேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே களமிறக்குவோம் என ஐதேகவின் செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க ஊடக மையத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டஓதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி திருடர்களை பாதுகாப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், எமக்கு அவ்வாறான அவசியம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதற்காக, திருடர்கள் என்று நிருபிக்கப்படாதவர்களை திருடர்கள் என்று முத்திரை குத்துவதற்கும் நாம் தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.கவின் தலைவரையே ரணில் விக்கிரமசிங்கவையே 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்,  அதன் போது எதிரணி வேட்பாளராக களமிறங்க போவதாக கூறப்படும் கோத்தாபய ராஜபக்சவை தாம்  சவால் என கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.

Comments
Loading...