Designed by Iniyas LTD
25 தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் விஷமருந்தி தற்கொலை முயற்சி – 6 பேர் கவலைக்கிடம்
தமிழகம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில், பணி புரிந்து வரும் 25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததால் அப்பகுதியில்ம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 41 நாட்கள் முழுவேலை வழங்கக்கோரியும், பணியிட மாற்றம் வழங்காமல் ஒரே இடத்தில் பணி வழங்கக்கோரியும் கடந்த சில நாட்களாகப் போராடி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(28) 25 தொழிலாளர்களும் ஒரே நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
விஷமருந்திய 6 தொழிலாளர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன
.
