தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

4 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க அரசாங்கம்  நடவடிக்கை..

பட்டதாரிகளை அரச சேவையில் உள்வாங்குவதற்கான வேலைத்திட்டடத்தின் கீழ், முதற்கட்டமாக 4 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க அரசாங்கம்  நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி  வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்காக முன்னதாக நடத்தபட்ட நேர்முகத் தேர்வுகளில் 25 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுக்கொண்டவர்களை முதற்கட்டமாக இணைத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்துக்கு 66 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் , அதில் , 4 ஆயிரத்து 800 பேர் மாத்திரமே நேர்முகத் தேர்வுகளில் 25 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சரவையில் கூறப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...