தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

50 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவ படைமுகாங்கள் – மீள்குடியேற முடியாமல் தாயக மக்கள்

உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுடைய குடிமனைகளை மையப்படுத்தி சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள 2 இராணுவ படைமுகாங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.camp

இதனால் அப்பகுதியினைச் சேர்ந்த 400 குடும்பங்கள் இன்று வரைக்கும் மீள்குடியேற முடியாமல் நலன்புரி முகாம்களில் உள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டது. கடந்த வருடம் முதலாம் கட்ட மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது ஒட்டகப்புலம் மற்றும் வறுத்தளைவிளான் போன்ற பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் குறித்த இரு பிரதேசங்கள் பகுதியளவிலேயே விடுவிக்கப்பட்டன.

அதாவது இரு பிரதேசங்களிலும் உள்ள மக்களுடைய குடியிருப்புக்கள், பாடசாலைகள் என்பவை விடுவிக்கப்படவில்லை. இப்பகுதிகளை உள்ளடக்கி இராணுவத்தினர் பாரிய படைமுகாங்களை அமைத்திருந்தாலேயே இப்பகுதிகள் விடுவிக்கப்படவில்லை. குறிப்பாக, ஒட்டகப்புலப் பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்ட இராணுவ முகாம் இன்றுவரை விடுவிக்கப்படாமல் உள்ளது, அதே போன்று வறுத்தளைவிளானில் 35 ஏக்கரை கொண்ட இராணுவ முகாம் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது

Comments
Loading...