Designed by Iniyas LTD
8 குழந்தைகளை பலிவாங்கிய குண்டுவெடிப்பு…
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான், வடக்கு ஃபர்பாய் மாகாணத்தில் பொலிஸ் நிலையம் அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோதே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதன்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டபோது,8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், ஆறு குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில் பொலிஸ்நிலையத்தைக் குறிவைத்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் பலியாகியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
