Designed by Iniyas LTD
இந்தோனேஷியாவில் பலி எண்ணிக்கை 1203 ஆக உயர்வு – உணவுக்காக கடைகள் சூறை…
இந்தோனேஷியா கலேவேசியா தீவில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்ண உணவு இன்றி கடைகளை உடைத்து வருகின்றனர்.
இந்தோனேசியாவின் சுலவேஸி தீவில்கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியது.
இதில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டு மக்களின் வாழ்கை முடங்கி முழுவதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 1203 ஐ எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதியின்மை காரணமாக மீட்பு பனி தாமதம் என்றும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் சொல்லப்படுகின்றது.
குறித்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், உணவுக்காக பாதிக்கப்பட்ட மக்கள் அங்கே இருக்கும் கடைகளை உடைத்து சூறையாட தொடங்கியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது
