தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தோனேசியாவிற்கு 100 கோடி டாலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி அறிவிப்பு….

இந்தோனேசியா நாட்டை சமீபத்தில் உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு 100 கோடி டாலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
 கடந்த மாதம் 29-ம் தேதி இந்தோனேசியா  சுலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை . தொடர்ந்து அங்குள்ள பலு நகரை சுனாமி தாக்கியது.
இதனால் அந்நகரம் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு , அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.
இந்த இயற்கை சீற்றத்துக்கு சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்ததோடு,  சுமார் 5 ஆயிரம் பேர் காணாமல் போனதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.
இதுதவிர, பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து உள்நாட்டிலேயே அகதிகள்போல் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு  ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி உயரதிகாரிகள் அங்கு  நேரில் சென்று   சுலாவேசி, லோம்போக் மற்றும் பலு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டதோடு ,  ஏற்பட்ட இழப்புகளை மதிப்பீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதேபோல், ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், நிலநடுக்கம், சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பான புணர்வாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளுக்காக  100 கோடி டாலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...