Designed by Iniyas LTD
வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை சமஷ்டியும் இல்லை – ஜனாதிபதி…
வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை சமஷ்டியும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் ரணில் விக்ரமசிங்க மீளவும் பிரதமராக பதவி வகித்தால் ஒரு மணித்தியாலமேனும் தான் ஜனாதிபதி பதவியில் நீடிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவது குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும், கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையடுத்து நல்லாட்சி அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை சமஷ்டியும் இல்லை” என ஜனாதிபதி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது..