தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எதிர்வரும் 5ஆம் திகதி கூடவுள்ள இலங்கை நாடாளுமன்றம் …..

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை கூட்டப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற  பல்கலைகழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர்  இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை  நாடாளுமன்றத்தை  கூட்டுவது தொடர்பாக ஜனாதிபதி  தனக்கு அறிவித்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தவாரம்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிகப்பட்டதை அடுத்து,   நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதிவரை  ஜனாதிபதி ஒத்திவைத்திருந்தார்.

அதனை அடுத்து  நாட்டில் பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்ததுடன்,  நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசமும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தது.

இந்நிலையில்  நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்ற நிலைமையை தணிக்கும் வகையில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவும் ஜனாதிபதியிடம்   வேண்டுகோள் விடுத்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...