Designed by Iniyas LTD
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் புதிய திட்டம்…
தமிழ் மக்களின் ஒற்றுமை பலத்தை வெளியுலகிற்கும் சிங்கள தலைமைகளுக்கும் எடுத்துக் காட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் புதிய திட்டமொன்றை வகுத்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
கூட்டமைப்பின் பலத்தை நிரூபிக்கவும் தமிழரின் ஒற்றுமையை வெளிக்காட்டவும் வடக்கு கிழக்கு இணைந்ததாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை அவர் ஏற்பாடு செய்ய உத்தேசித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அண்மையில் ஐ.தே.கட்சியின் நல்லாட்சி அரசாங்கம் கவிழ்ந்த நிலையில் தனது பலத்தை காட்ட ஐ.தே.கட்சி தலைநகர் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.
அதே போல் த.தே.கூட்டமைப்பும், தாம் தமிழ் மக்களின் ஏகோபித்த மக்கள் பிரதிநிதிகள் என்பதை நிரூபணம் செய்து கூட்டமைப்பில் பலத்தை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்ட திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தமிழரசுக்கட்சி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் மாபெரும் இளைஞர் அணி மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டினை தொடர்ந்து கூட்டமைப்பின் பலத்தை நிரூபிக்கவும் தமிழரின் ஒற்றுமையை வெளிக்காட்டவும் வடக்கு கிழக்கு இணைந்ததாக இந்த ஆர்ப்பாட்டதை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பு கூட்டமைப்பின் இரண்டாம் கட்ட இளம் தலைவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெ:ளியாகியுள்லமை குறிப்பிடத்தக்கது.