Designed by Iniyas LTD
யாழில் தீபாவளி தினத்தன்று திருடர்கள் கைவரிசை…
யாழில் நேற்றைய தினம் ஆலயங்களிற்குச் சென்ற பலர் தமது தங்க ஆபரணங்களை இழந்துள்ளதாக தெரியந்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நேற்றைய தினம் ஆலயங்களில் அதிக மக்கள் கூட்டம் கூடினர் .
இதன்போது கல்வியங்காடு பேச்சியம்மன் ஆலயத்திற்கு சென்று திரும்பிய ஓர் பெண்மணி வீடு திரும்பிய சமயம்,
மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் 13 தங்கப் பவுண் தாலிக் கொடியினை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இதேவேளை, திருநெல்வேலி சிவன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த ஓர் பெண்மணியிடம் இளைஞர் ஒருவர் 3 பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
மேலும் ஆலயத்திற்குச் செல்வதற்காக கொக்குவில் பகுதியில் பயணித்த ஓர் மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மூதாட்டியை தள்ளி வீழ்த்தி விட்டு 2 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.