Designed by Iniyas LTD
காத்தான்குடியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி…
காத்தான்குடியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் புதிய காத்தான்குடி-06, அன்வர் பள்ளி வீதியைச் சேர்ந்த ஏ.எல்.எம். அனீஸ் (வயது 39) என்பரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டு வளாகத்தில் மின் விளக்கு பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மின்சார வயர் வீட்டு முற்றத்தில் தேங்கிக் கிடந்த மழைநீரில் தொடர்புபட்டு அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவரை உடனடியாகவே காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும் அவர் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவ்க்கபட்டுள்ளது.