தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிராமங்களுக்கு செல்லும் வீதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர்  வீதிச்சோதனையில்…

மட்டக்களப்பு வவுணதீவில்    பொலீசார்  படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் மட்டக்களப்புபில்  இருந்து கிராமங்களுக்கு செல்லும் வீதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர்  வீதிச்சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்   முன்னாள் போராளிகள் பலரை பொலீசார் கைதுசெய்து  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பில் புலம்பெயர் தமிழர்களின் நிதி உதவியில் தேசத்தின் வேர்கள் என்ற அமைப்பு மாவீரர் நாளினை ஏற்பாடு செய்துள்ளது

கிளிநொச்சியில் சரணைடைந்த முன்னாள் போராளி கடந்த 26 ஆம் திகதி மட்டக்களப்பு தாண்டியடிக்கு சென்று அங்கு தங்கி நின்று மாவீரர் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...