தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் நுண்நிதி கடன்களை வசூலிக்க தடை …

அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது

 பாதிக்கப்பட்ட  முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி  மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி  மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது

இந்த கலந்துரையாடலில் நுண்ணிதி கடன்வசூலிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் நுண்நிதி  கடன் வசூலிப்பதை தற்காலிகமாக தடுத்து நிறுத்துமாறு,

  மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிகபட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...